தமிழ்நாடு

மருத்துவமனைக்குள் 'மாஸ்க்' அவசியம் : ரூ.500 அபராதம் விதிக்க முடிவு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சிவகங்கை :சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாளர் தவிர்த்து மாஸ்க் அணியாமல் கூட்டமாக வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரிவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா முதல், 2 ம் அலையை தொடர்ந்து ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகின்றன.

சிவகங்கை :சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாளர் தவிர்த்து மாஸ்க் அணியாமல் கூட்டமாக வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரிவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா முதல், 2 ம் அலையை தொடர்ந்து ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் இது வரை 20,957 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் 20,395 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தற்போது 349 பேர் மருத்துவமனை, சிகிச்சை மையம், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மாணவிகள் விடுதியில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருந்து தற்போது விடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து டாக்டர்களுக்கும் பரவி வருகிறது. இதன் காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி, அவரது உதவியாளர் ஒருவர் தவிர வேறு யாரும் தேவையின்றி கூட்டமாக வரவேண்டாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் வழக்கம் போல் தேவையில்லாமல் கூட்டமாக வருவதால் அவர்கள் மீது சமூக இடைவெளியின்றி, மாஸ்க் அணியாத நிலையில் ரூ.500 அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மருத்துவ மனைக்கு தேவையில்லாத பட்சத்தில் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X