பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்த பேச்சு: விசைத்தறியாளர்கள் இன்று ஆலோசனை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பல்லடம்:காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடையே, இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்கள், இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு அமல்படுத்தாததை கண்டித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. தினமும், ஒரு கோடி மீட்டர் என்ற

பல்லடம்:காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடையே, இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்கள், இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு அமல்படுத்தாததை கண்டித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. தினமும், ஒரு கோடி மீட்டர் என்ற அடிப்படையில், இதுவரை, 350 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.விசைத்தறியாளர்கள் கூறியதாவது:கடந்த ஏழு நாட்களாக கூலி உயர்வை அமல்படுத்த கோரி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறியாளர்கள், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் சூழலில், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஜன., 21 அன்று மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு, கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைத்துள்ளனர்.பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனை அளிக்கிறது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து, கூட்டமைப்பிலுள்ள, 9 சங்க நிர்வாகிகளுடன், மங்கலத்தில் இன்று (15ம் தேதி) ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X