திருப்பூர்:எளிதில் கிடைக்காத தேங்காய் பூ, அவ்வப்போது, திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது; மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.மட்டை உரிக்காத தேங்காய்கள், பிறகு கொப்பரையாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து, தேங்காய் எண்ணெய் அரைத்து எடுக்கப்படுகிறது. இருப்பு வைக்கும் தேங்காய்க்குள், தேங்காய் பூ உருவாகியிருக்கும்.தேங்காய் பூவை வெளியே எடுத்துவிட்டு, வழக்கம் போல் காய வைத்து கொப்பரை தயாரிக்கின்றனர். இவ்வாறு, அகற்றப்படும் தேங்காய் பூவை வாங்கி வரும் முதியோர், மார்க்கெட்டுகளுக்கு சென்று, தேங்காய் பூ வை விற்று காசாக்குகின்றனர்.அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் பகுதியில், இட்லி கடை நடத்தும் தங்கமணி என்ற மூதாட்டி, தனக்கு கிடைக்கும் தேங்காய் பூ வை எடுத்துவந்து, திருப்பூர் மார்க்கெட்டில் விற்கிறார்.இதுகுறித்து தங்கமணி கூறுகையில், ''பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல், தேங்காய் பூவுக்கு உள்ளது. டாக்டர்கள் அறிவுரைப்படி, தேவையானவர்கள் மட்டும், தேடிவந்து தேங்காய் பூ வை வாங்கி செல்கின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE