சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை தாசில்தார் 3 பேருக்கு கொரோனா

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:அரசு விழாக்களில் பங்கேற்ற, மூன்று துணை தாசில்தார்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வருவாய்த்துறையினர் பீதியில் உள்ளனர்.திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 12ம் தேதி திருமண நிதி உதவி வழங்கும் விழா, ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. அதன்பின், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவும் நடந்தது.தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில்,

திருப்பூர்:அரசு விழாக்களில் பங்கேற்ற, மூன்று துணை தாசில்தார்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வருவாய்த்துறையினர் பீதியில் உள்ளனர்.திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 12ம் தேதி திருமண நிதி உதவி வழங்கும் விழா, ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. அதன்பின், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவும் நடந்தது.தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நல உதவி வழங்கிய, தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜூக்கு, நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அதே விழாவில் பங்கேற்ற, தெற்கு தாலுகாவை சேர்ந்த மூன்று துணை தாசில்தார்களுக்கும் நேற்று தொற்று உறுதியானது.தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் அருள்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதியானது.எம்.எல்.ஏ., மற்றும் துணை தாசில்தார்களுக்கு தொற்று உறுதியானதால், தொடர்பில் இருந்த, வருவாய்த்துறை அலுவலர்கள் பீதியில் உள்ளனர்.விழாக்களில் பங்கேற்றவர்களும், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும், கொரோனா பரிசோதனை செய்து, முன் எச்சரிக்கையுடன் இருக்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X