பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பஸ்களில் ஒரு லட்சம் பேர் பயணம்!

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:கடந்த மூன்று நாட்களில் திருப்பூரில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.திருப்பூரில் இருந்து, 11ம் தேதி இரவு முதல் பொங்கல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. முதல் இரு நாட்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தாலும், 13ம் தேதி நாள் முழுதும் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்களில் இருக்கைகள் நிரம்பி, படிக்கட்டில் தொங்கியபடி பலரும்

திருப்பூர்:கடந்த மூன்று நாட்களில் திருப்பூரில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.திருப்பூரில் இருந்து, 11ம் தேதி இரவு முதல் பொங்கல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. முதல் இரு நாட்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தாலும், 13ம் தேதி நாள் முழுதும் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்களில் இருக்கைகள் நிரம்பி, படிக்கட்டில் தொங்கியபடி பலரும் பயணித்தனர். சேலத்துக்கு குறைந்தளவு பஸ் இயக்கப்பட்டதால், நள்ளிரவை தாண்டியும் பயணிகள் பலர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். அதிகாலையில் வந்த பஸ்களில் புறப்பட்டுச் சென்றனர்.'கடந்த, 11 முதல், 13ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் திருப்பூரில் இருந்து ஒரு லட்சம் பேர் வெளியூர் பயணித்துள்ளனர். பிற ஊர்களில் இருந்து திருப்பூருக்கு வந்தவர் எண்ணிக்கை, 15 ஆயிரம். கடந்த தீபாவளி பண்டிகையை விட, பொங்கல் பண்டிகைக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும், கூடுதலாக பயணிகள் பயணித்தனர்,' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகரித்தது எப்படி?தீபாவளி பண்டிகையின் போது திருச்சி பஸ் பெருந்தொழுவு வழியாகவும், சேலம் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்பட்டது.தற்போது, போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.யுனிவர்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பி.என்., ரோடு, குமரன் ரோடு வழியாக திருச்சி பஸ்களும் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இதனால், பயணிகளுக்கு அலைச்சல் குறைந்தது. பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X