சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவரை கண்டித்து கிராமத்தில் நோட்டீஸ் பிரசாரம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி தலைவராக இருப்பவர் ஜெயந்தி (அ.தி.மு.க.,). ஊராட்சிக்கு உட்பட்ட மீனாம்பாறை, நொச்சிபாளையம் உள்ளிட்ட பகுதியில், ஊராட்சி தலைவரை கண்டித்து பரவலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:மீனாம்பாறை பொதுமக்கள் சார்பாக, ஊராட்சி தலைவரின் தவறான செயல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஊராட்சி தலைவர், 20 ஆயிரம் ரூபாய்
 ஊராட்சி தலைவரை கண்டித்து கிராமத்தில் நோட்டீஸ் பிரசாரம்

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி தலைவராக இருப்பவர் ஜெயந்தி (அ.தி.மு.க.,). ஊராட்சிக்கு உட்பட்ட மீனாம்பாறை, நொச்சிபாளையம் உள்ளிட்ட பகுதியில், ஊராட்சி தலைவரை கண்டித்து பரவலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:மீனாம்பாறை பொதுமக்கள் சார்பாக, ஊராட்சி தலைவரின் தவறான செயல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஊராட்சி தலைவர், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனே வீட்டு வரி ரசீது வழங்குகிறார். வீடு கட்டுபவர்களை மிரட்டி, ஒரு சிலருக்கு ஆதரவாக வீடு மாற்றி கொடுக்கிறார். இச்செயல்களைக் கண்டித்து, ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பொதுமக்கள் சார்பில் என்று அச்சடிக்கப்பட்டுள்ள இந்த மொட்டை நோட்டீசில், நாள், நேரம் உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X