சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரியுடன் மோதல்: பா.ஜ., நிர்வாகிகள் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், வியாபாரியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்து கட்சியினர் திரும்புகையில், பழ வியாபாரி முத்துசாமி என்பவர், பிரதமர் குறித்து அவதுாறாக பேசியதுடன் பா.ஜ., நிர்வாகிகளை கத்தியை காட்டி கொலை

பல்லடம்:பல்லடத்தில், வியாபாரியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்து கட்சியினர் திரும்புகையில், பழ வியாபாரி முத்துசாமி என்பவர், பிரதமர் குறித்து அவதுாறாக பேசியதுடன் பா.ஜ., நிர்வாகிகளை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ., நிர்வாகிகளுக்கும், வியாபாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, பா.ஜ., மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ், போலீசில் புகார் அளித்தார்.இதற்கிடையே, வியாபாரியை தாக்கியதாக மாவட்ட பா.ஜ., இளைஞரணி பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், 40; தெற்கு ஒன்றிய பொறுப்பாளர், 38 ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வியாபாரி முத்துசாமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X