சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவரை கொன்ற மூவர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பூர்:போதை ஆசாமியிடம் அபேஸ் செய்த பணம் பங்கு பிரிக்கும் தகராறில், டிரைவரை கழுத்தறுத்து கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் சரணவன், 27. சரக்கு ஆட்டோ டிரைவர். திருப்பூர் லட்சுமி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை

திருப்பூர்:போதை ஆசாமியிடம் அபேஸ் செய்த பணம் பங்கு பிரிக்கும் தகராறில், டிரைவரை கழுத்தறுத்து கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் சரணவன், 27. சரக்கு ஆட்டோ டிரைவர். திருப்பூர் லட்சுமி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.இது தொடர்பாக திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நன்னுபிரசாத், 24; சித்திக் பாஷா,30 மற்றும் மனோஜ், 21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் கூறியதாவது:மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே, 10 ஆயிரம் ரூபாயை மது அருந்த சென்ற சரவணன் இதை எடுத்துள்ளார். இதைக்கண்ட மற்ற மூவரும், பணத்தில் பங்கு கேட்டுள்ளனர்.இதில் ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து, சரவணனை கழுத்தறுத்து தப்பினர். அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X