பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
ஓய்வு போலீசார் சங்க கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு விருதுநகர் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க மாதாந்திர கூட்டம் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வீரபாண்டி வரவேற்றார். துணைத் தலைவர் முனிசாமி, மாவட்ட செயலாளர் தர்மராஜன், துணை செயலாளர் ஜோதிராஜ், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மாறன், சுப்புராம், நிர்வாக குழு


ஓய்வு போலீசார் சங்க கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு விருதுநகர் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க மாதாந்திர கூட்டம் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வீரபாண்டி வரவேற்றார். துணைத் தலைவர் முனிசாமி, மாவட்ட செயலாளர் தர்மராஜன், துணை செயலாளர் ஜோதிராஜ், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மாறன், சுப்புராம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜூ, மோகன் பேசினர். உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நீதிமன்ற பொறுப்பாளர் ராமமூர்த்தி விளக்கமளித்தார். பொருளாளர் பெருமாள்சாமி வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர் நாராயணன் நன்றி கூறினார்.............வா

டிக்கையாளர் தினம் அனுசரிப்பு

விருதுநகர் : தினமலர் நகர் நுழைவுப்பகுதியில் உள்ள டான்பெட்டின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தினம் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜன. 9ல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை நாட்டின் விருப்பமான எரிசக்தி அளிக்கும் நிறுவனமாக மாற்றிய அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பெட்ரோல் போட வருவோருக்கு இனிப்புகள் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று முன்தினம் விருதுநகரில் டான்பெட்டின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தினம் அனுசரிக்கப்பட்டது. மண்டல மேலாளர் ஜீவானந்தம், பெட்ரோல் பங்க் காசாளர் முத்துலெட்சுமி இனிப்புகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X