பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வீடுகள் தோறும் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்தனர். இதன் பின் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். விருதுநகர்கலெக்டர் அலுவலக வாயிலில் அரசு அலுவலர்கள் பொங்கல் கொண்டாடினர். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், கலெக்டர்

விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வீடுகள் தோறும் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்தனர். இதன் பின் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். விருதுநகர்கலெக்டர் அலுவலக வாயிலில் அரசு அலுவலர்கள் பொங்கல் கொண்டாடினர். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தனர்.டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் காளிமுத்து பங்கேற்றனர்.விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சையது முஸ்தபா தலைமையில் பொங்கல் விழா நடந்தது. சுகாதார பிரிவினர், துாய்மை பணியாளர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஒன்றிய அலுவலகத்தில் சுமதி ராஜசேகர் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: கொரோனோ காரணமாக நேற்று முதல் ஜன. 18 வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டாள், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி, பெரிய மாரியம்மன் கோயில்கள் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.பஸ்களும் குறைந்த அளவு இயங்கியதால் வெளியூர் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஒடைப்பட்டி மடம் வன்னி விநாயகர் கோயில், துலுக்கன்குறிச்சி வாழை மரபாலசுப்பிரமணி சுவாமி கோயில்களில் உலக மக்களின் நன்மை வேண்டி கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம். அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X