விருதுநகர் ;"விருதுநகர் மாவட்டத்தில் 108 சேவை மூலம் 2021ல் 39,901 பேர் பயனடைந்துள்ளதாக," 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட அலுவலர் ஸ்ரீசெந்தில்குமார் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் தற்போது 23 ஆம்புலன்ஸ்கள் 108ன் அவசர சேவை கீழ் இயங்கி வருகின்றன. 54 டிவைர்கள் 42 மருத்துவ உதவியாளர்கள் பணிபுகின்ளறனர். 6 மாதங்களுக்கு ஒரு முறை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இச்சேவை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் 39,901 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 19,247 பேர் கர்ப்பிணிகள். 33 பேருக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்துள்ளது. கொரோனா நோயாளிகள் 2259 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவை தவிர விபத்தில் சிக்கியவர்கள் 5500 பேர், விஷம் அருந்தியவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் 1175 பேர், விஷப்பூச்சிகளால் கடிப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் 1770 பேர், இதய நோய், மூச்சுத்திணறல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 2603 பேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட 614 பேர், இதர மருத்துவ உதவி பெற்ற 5064 பேர் என 39,901 பேர் 108 சேவை மூலம் பயன் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE