பொது செய்தி

தமிழ்நாடு

தோல்வியை பகுப்பாய்வு செய்ய கற்றுக்கொள்ளுங்கள் : 'காபி வித்' கலெக்டரில் கலெக்டர் அறிவுரை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
விருதுநகர் :"தோல்வியை பகுப்பாய்வு செய்ய கற்று கொள்ளுங்கள்," என ,காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள 21 அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறமை வாய்ந்த 21 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் திறமைகளை பராட்டும் விதமாகவும்

விருதுநகர் :"தோல்வியை பகுப்பாய்வு செய்ய கற்று கொள்ளுங்கள்," என ,காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள 21 அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறமை வாய்ந்த 21 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் திறமைகளை பராட்டும் விதமாகவும் நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி மாணவர்களுடன் கலந்துரையாடினார்இதில் பங்கேற்ற மாணவர்கள், லட்சியம், எந்த துறையில் ஆர்வம், பிடித்த விளையாட்டு, வீரர்கள், பொழுதுபோக்கு குறித்து தெரிவித்தனர். கலெக்டர் பேசியதாவது: மாணவர்கள் தற்போது பள்ளி கல்வி பயிலும் போதே தங்களுக்கென்று ஒரு தெளிவான இலக்கை வகுத்து கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். மாணவர்களாகிய நீங்கள் தோல்வியை சந்தித்தால் எதனால் வந்தது என்று அதை பகுப்பாய்வு செய்து ,அந்த தோல்வியில் இருந்து நாம் பாடத்தை கற்று கொண்டு லட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டும், என்றார்.மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X