பழநி ;பழநி மலை கோயில் நிர்வாகத்தின் சார்பில் அரசியல் அறிவிப்பின்படி திருக்கோயில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு சட்ட சபையில் திருக்கோயில் பணிபுரியும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கும் புதுத் துணிகள் வழங்க அறிவிப்பு வெளியானது. இந்நிகழ்ச்சி பழநி கோவிலில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மலைக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன. மேலும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. இணை ஆணையர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.