மக்காச்சோள விவசாயிகளை துரத்தும் மழை : அறுவடைக்கு பின்னும் தொடருது| Dinamalar

மக்காச்சோள விவசாயிகளை துரத்தும் மழை : அறுவடைக்கு பின்னும் தொடருது

Added : ஜன 15, 2022 | |
கன்னிவாடி, கன்னிவாடி பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையால் மக்காச்சோள விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை, படைப்புழு, கதிர் மணி பாதிப்பு, விலை கிடைக்காத பிரச்னைகள் மக்காச்சோள விவசாயிகளுக்கு சவாலாகவே உள்ளன. கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, புளியராஜக்காபட்டி, மாங்கரை, வட்டப்பாறை, கசவனம்பட்டி, வண்ணம்பட்டி வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காய்பட்டி

கன்னிவாடி, கன்னிவாடி பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையால் மக்காச்சோள விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை, படைப்புழு, கதிர் மணி பாதிப்பு, விலை கிடைக்காத பிரச்னைகள் மக்காச்சோள விவசாயிகளுக்கு சவாலாகவே உள்ளன. கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, புளியராஜக்காபட்டி, மாங்கரை, வட்டப்பாறை, கசவனம்பட்டி, வண்ணம்பட்டி வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காய்பட்டி பகுதியில் அதிகளவில் மக்காச்சோள சாகுபடிதான் நடக்கிறது.பால் பிடிக்கும் பருவம், சில இடங்களில் அறுவடை நிலையில் உள்ளதால், சமீபத்தில் பெய்த தொடர் மழை விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. தற்போது அறுவடை முடிந்து மக்காச்சோளம் உலர்த்தும் சூழலில், நேற்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.விவசாயிகள் கூறுகையில், "விளைநிலத்தில் தேங்கிய மழைநீரால் அறுவடையை விரைவுபடுத்தினோம். அவற்றை உலர்த்த களம் இல்லாமல் ரோட்டில் உலர்த்துகிறோம். இந்நிலையில் விவசாயிகளை துரத்துவது போன்று, இப்பகுதியில் திடீர் மழை பெய்துள்ளது. இதுதொடர்ந்தால் அறுவடை செய்து உலர்த்த முடியாமல் போகும். கதிர் மணிகள் பாதித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X