பொது செய்தி

தமிழ்நாடு

நெரிசல் தரும் நெடுஞ்சாலைத்துறை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
வடமதுரை, :நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு பணிக்காக தோண்டிய பள்ளத்தால் வடமதுரையில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து நிற்கிறது.வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் தாராபுரம், வேடசந்தூர், பழநி, கோவையில் இருந்து வந்து திரும்பும் பஸ்கள் இங்குள்ள காந்திசிலை முன்பாக சில நிமிடங்கள் நின்று புறப்படும். இவ்விடத்தில் போஜனம்பட்டி ரோடு, கார், ஆட்டோ நிறுத்தங்களுக்கான ரோடும்

வடமதுரை, :நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு பணிக்காக தோண்டிய பள்ளத்தால் வடமதுரையில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து நிற்கிறது.வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் தாராபுரம், வேடசந்தூர், பழநி, கோவையில் இருந்து வந்து திரும்பும் பஸ்கள் இங்குள்ள காந்திசிலை முன்பாக சில நிமிடங்கள் நின்று புறப்படும். இவ்விடத்தில் போஜனம்பட்டி ரோடு, கார், ஆட்டோ நிறுத்தங்களுக்கான ரோடும் பிரிவதால் அடிக்கடி போக்குவரத்து சிக்கல் ஏற்படும்.தற்போது வடமதுரையில் நகர் இணைப்பு ரோடு புதுப்பித்தல் பணி நடக்கிறது. புதிய ரோட்டிற்கு இருபக்கமும் மண்அணைப்பது வழக்கம். இதற்காக காந்தி சிலை முன்பாக பஸ்கள் நிற்கும் பகுதியில் மண் எடுத்தனர். இதில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இங்கு பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன. இதனால் இவ்வழியாக வரும் எந்த வாகனமும் எளிதாக கடந்து செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. நெருக்கடிக்கு காரணமான பள்ளத்தை உடனே மூட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X