கொடைக்கானல், :கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். நகரில் ஆங்காங்கே அழகு நிலையம் என்ற பெயரில் அழகிகளை வைத்து மசாஜ் சென்டர்கள் நடக்கிறது. சட்டவிரோதமாக நடக்கும் இம்மையங்களில் விபச்சாரமும் தலைதூக்கியுள்ளது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து, குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் இப்பகுதியில் குடியிருப்போர் முகம் சுளிக்கின்றனர்.இருநாட்களுக்கு முன்பு, நாயுடுபுரம் டிப்போவில் செல்வராஜ் 59, பூம்பாறையை சேர்ந்த கனகராஜ் 21, மதுரையை சேர்ந்த சரண் 22, ஆகியோர் 2 பெண்களை வைத்து ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்ததாகக் கூறி, போலீசார் மூவரையும் கைது செய்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப் பகுதியில் மசாஜ் சென்டர்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE