பொது செய்தி

தமிழ்நாடு

கோடை காலத்தை சமாளிக்கதிட்டமிடுங்கள் விவசாயிகளே : அதிகாரிகள் யோசனை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திண்டுக்கல், :'கோடை காலத்தை சமாளிக்க விவசாயிகள் இப்போதே திட்டமிடுங்கள்' என, திண்டுக்கல் விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, வேளாண் அலுவலர் கண்ணன் தெரிவித்தனர்.அவர்கள் தெரிவித்தது: கோடை வெப்பத்தை குளிர்பானங்களை கொண்டு தனித்தாலும் இயற்கை முறையில் விளையும் பழங்கள் கோடையை தணிப்பதற்கு உதவுவதோடு ஊட்டச்சத்தும் அளிக்கின்றன. தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் முக்கிய பங்கு


திண்டுக்கல், :'கோடை காலத்தை சமாளிக்க விவசாயிகள் இப்போதே திட்டமிடுங்கள்' என, திண்டுக்கல் விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, வேளாண் அலுவலர் கண்ணன் தெரிவித்தனர்.அவர்கள் தெரிவித்தது: கோடை வெப்பத்தை குளிர்பானங்களை கொண்டு தனித்தாலும் இயற்கை முறையில் விளையும் பழங்கள் கோடையை தணிப்பதற்கு உதவுவதோடு ஊட்டச்சத்தும் அளிக்கின்றன. தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜனவரியில் இப்பயிர்களை விதைத்தால் மார்ச், ஏப்ரலில் நல்ல பலன் கிடைக்கும். இப்போது இது சரியான பருவம். விதைப்பதற்கு முன் விதைகளை பரிசோதனை செய்து விதைத்தால் விதைகள் வீணாவதை தடுக்கலாம்.சரியான தரமான விதைகளை தேர்ந்தெடுக்கவும் உதவும். தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழ விதைகளுக்கு முளைப்பு திறன் 60 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், ஈரப்பதம் 7 சதவீதம் இருக்க வேண்டும். வெள்ளரி, முலாம் பழ விதைகளுக்கு பரிசோதனை முடிவுகள் 8 நாட்கள், தர்பூசணிக்கு 14 நாட்களிலும் பெற்று கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளில் 100 கிராம் அளவு திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு செய்து பயனடையலாம். ஒரு மாதிரிக்கு கட்டணம் ரூ.30, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X