திண்டுக்கல், :சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் 'முன்மாதிரி கிராம விருது'க்கு விண்ணப்பிக்கலாம்.சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை கவுரவிக்கும் வகையில் மாவட்ட அளவில் 'முன் மாதிரி கிராம விருது', மற்றும் ரூ.7.50 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. மாநில அளவில் விருதும், ரூ.15 லட்சமும் வழங்கப்படும். திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையின் நீடித்த தன்மை, திடக்கழிவு மேலாண்மை, சேகரிக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை, சாம்பல் நீர் மேலாண்மை, கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.இதேபோல் கிராமங்கள் பார்ப்பதற்கு துாய்மையாகவும், அழகாகவும் காட்சியளித்தல், சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும். மாவட்டம், வட்டார அளவில் குழு அமைத்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தற்போதைய சூழ்நிலையில் விருதுக்கான திட்டக் கூறுகளில் முழுமை பெற்றுள்ள ஊராட்சிகளின் தகுதி காணப்படும். மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் விபரங்களை பெற்று தகுதியான ஊராட்சிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE