கன்னிவாடி, ;கன்னிவாடி, செம்பட்டி வழித்தடங்களில் அரசு பஸ் சேவை குறைப்பால், ஆட்டோக்கள் கொண்டாட்டத்தால் பலர் அவதிக்குள்ளாகினர்.திண்டுக்கல்லில் இருந்து மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம் வழித்தடங்களில் கன்னிவாடிக்கும், சின்னாளபட்டி, ஆத்தூர், மல்லையாபுரம், அம்மையநாயக்கனூர் தடங்களிலும் சில டவுன் பஸ்கள் இயக்கம் 'டிரிப்-கட்' செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, பழநி பாதயாத்திரை சூழலில், 2 நாட்களாக அரசு டவுன் பஸ் சேவையில் பாதிப்பு அதிகரித்தது. பஸ் வசதியை நம்பி, கூலி வேலைக்கு வெளியூர் சென்ற தொழிலாளர்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டோக்கள் கூடுதல் வசூலில் இறங்கின.ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன் கூறியதாவது: அரசு பஸ் சேவை குறைபாடு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வாகன வசதியற்றோர் அரசு பஸ்சையே நம்பியுள்ளனர். கூலித் தொழிலாளர்கள் ஆட்டோக்களுக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, வழக்கமான பஸ் சேவையை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE