நாடகமாடுகிறார் பிரியங்கா பா.ஜ., சரமாரி குற்றச்சாட்டு

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி:பெண்களின் போராளியாக தன்னை காட்டிக் கொள்ள காங்., பொதுச் செயலர் பிரியங்கா நாடகமாடுகிறார் என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பெண்களின் உரிமைகள், பாதுகாப்புகாக போராடுபவராக தன்னை காட்டிக் கொள்ள பிரியங்கா நாடகமாடுகிறார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறிய வன்முறை நடந்தாலும், அங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:பெண்களின் போராளியாக தன்னை காட்டிக் கொள்ள காங்., பொதுச் செயலர் பிரியங்கா நாடகமாடுகிறார் என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.



latest tamil news


பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பெண்களின் உரிமைகள், பாதுகாப்புகாக போராடுபவராக தன்னை காட்டிக் கொள்ள பிரியங்கா நாடகமாடுகிறார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறிய வன்முறை நடந்தாலும், அங்கு ஓடிச்சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பிரியங்காவும், அவரது சகோதரரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான எந்த வன்முறை நடந்தாலும் கண்டும் காணாதது போல் இருக்கிறார்.ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவரை பார்க்கக் கூட பிரியங்கா செல்லவில்லை.


latest tamil news



இது பற்றி புகார் மனு கொடுக்க வந்தோரையும் சந்திக்க மறுத்து காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா தன் பிறந்தநாளை கொண்டாடினார்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களின் போராளியாக காட்டிக் கொள்பவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
15-ஜன-202214:15:29 IST Report Abuse
Suppan நாங்கள் ஆளும் மாநிலங்களில் கற்பழிப்பெல்லாம் நடக்காது. சின்ன பசங்க சித்தே அப்படி இப்படின்னு இருப்பாங்க. அதெல்லாம் சும்மா விளையாட்டுதான். முலாயம் சிங் அப்படித்தானே சொன்னாரு. அதுக்கு ஒரு குதி கூட குதிக்கலயே நீங்க. இதெல்லாம் போய் அரசியல் பண்ணிக்கிட்டு. அப்பால போங்க. எங்க இளவரசி வராங்க.
Rate this:
Cancel
15-ஜன-202213:43:30 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அழிந்து போன கட்சி
Rate this:
Cancel
15-ஜன-202213:39:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் மத வெறியும் , சாதி வெறியும், பண வெறியும் , பதவி வெறியும் இவைகள்தான் மனிதனை கொல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X