திண்டுக்கல், தொற்று அதிகரித்து வருவதால் திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சை மையங்களை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது.மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் ஒரே நாளில் 122 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'ஆக்சிஜன்' வசதியுடன் 2,900 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இது தவிர, பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளை கண்காணிக்க சுழற்சி முறையில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE