பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தரமான குடிநீர் கிடைக்குமா?

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (19)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வி.எஸ்.கோபாலன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிய, 'அம்மா குடிநீர்' திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளித்தது. அனைத்து பேருந்து நிலையங்களிலும், 10 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் விற்பனையானது.இதனால் தனியார் குடிநீர் பாட்டில்களின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்




latest tamil news


வி.எஸ்.கோபாலன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிய, 'அம்மா குடிநீர்' திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளித்தது. அனைத்து பேருந்து நிலையங்களிலும், 10 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் விற்பனையானது.

இதனால் தனியார் குடிநீர் பாட்டில்களின் விலையும் உயராமல் இருந்தது.தற்போது அரசியல் காரணத்திற்காக, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 'அம்மா குடிநீர்' பாட்டில்கள் எங்கும் கிடைக்கவில்லை. பேருந்து நிலையத்தில், குடிநீர் விற்ற மையம் எல்லாம் பூட்டிக் கிடக்கின்றன.மேலும் பெரும்பாலான பேருந்து நிலையங்களில், பல்வேறு தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில் கிடைக்கும் குடிநீர் 1 லிட்டர், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதனால் பெரும்பாலான பயணியர், தங்கள் வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.ரயில் நிலையங்களில் இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. அது போல, பேருந்து நிலையங்களிலும் குடிநீர் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


latest tamil news


.'அம்மா' என்ற பெயர், தி.மு.க., அரசுக்கு பிடிக்கவில்லை என்றால், என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டி கொள்ளட்டும்; மக்களுக்கு தரமான குடிநீர் கிடைத்தால் போதும்.பேருந்து நிலையத்தில் தரமான உணவகம், சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் கிடைத்தால், அது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜன-202203:07:10 IST Report Abuse
Ramesh Sargam தரமான குடிநீர் கிடைக்குமா? கொஞ்சம் பொறுங்கள். மக்களின் வரிப்பணத்தில், கோடிக்கணக்கில் கூவம் ஆற்றை நமது மாண்புமிகு, தமிழ் படிக்கவராத முதல்வர் சுத்தம் செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். கூவம் சுத்தம் செய்யப்பட்டவுடன், நீங்கள் கேட்ட தரமான குடிநீர் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். பொறுமை அவசியம். அதுவரை, இருக்கவே இருக்கிறது - தரமான டாஸ்மாக் 'குடிநீர்' அதை குடித்து, உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
15-ஜன-202214:44:39 IST Report Abuse
ஆரூர் ரங்
Rate this:
Cancel
15-ஜன-202214:44:30 IST Report Abuse
ஆரூர் ரங் சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் கொடுக்க கூடாதுன்னு போராடின மஹாத்மா 🤔துரைமுருகன் இருக்கும் கட்சி கிட்ட இதனை எதிர்பார்க்கக் கூடாது. அவங்களால முடிஞ்சது. சென்னைக்கு காவிரி குடிநீர் என வீராணம் திட்டம்😉☺ போட்டு காவிரித்தாய்க்கு சென்னையில் சிமெண்ட் சிலை வைத்து விழா கொண்டாட்டம் மட்டுமே. முடிவில் 😪தண்ணீரும் வரவில்லை. காவிரித்தாய் சிலை இப்போது இருக்குமிடமும் தெரியவில்லை . வீராணம் ஊழல் குழாய்கள் இன்னும் சாட்சிகளாக . இப்போ மாறன் வீட்டில்😁 மட்டுமே காவிரி உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X