தமிழ்நாடு

அதிகரிப்பு: *கொரோனா உறுதியாகும் சதவீதம் தொடர்ந்து

Added : ஜன 15, 2022
Share
Advertisement
தேனி,-தேனி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யும் சதவீதம் தொடர்ந்து அதிகரிப்பதால் தேனி மாவட்டம் 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.தேனி மாவட்டத்தில் 2020 டிசம்பரில் 11 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது பரவி வரும் கொரோனா 3ம் அலையால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜன.,1 முதல்

தேனி,-தேனி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யும் சதவீதம் தொடர்ந்து அதிகரிப்பதால் தேனி மாவட்டம் 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.தேனி மாவட்டத்தில் 2020 டிசம்பரில் 11 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது பரவி வரும் கொரோனா 3ம் அலையால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜன.,1 முதல் நேற்று வரை 14 நாளில் 632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார்.குறிப்பாக ஜன.,12ல் 82, 13ல் 128 பேர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று 180 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.பரிசோதனை அடிப்படையில் நோய் உறுதி செய்யும் தன்மை ஜன.,12ல் 5.82, 13ல் 9.96, நேற்று 11.36 சதவீதமாக உயர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியான பட்டியலோடு இதை ஒப்பிட்டால் தமிழகத்தில் நோய் உறுதி செய்யும் சதவீதம் அதிகம் உள்ள மாவட்டங்களில் தேனி 10வது இடத்துக்கு வந்துள்ளது.இதற்கு பொதுமக்களின் அலட்சியம் தான் காரணம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே அனைவரும் முகக்சவம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X