பெரியகுளம் -பெரியகுளத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது 71 ஆவது பிறந்த நாளை தொண்டர்களுடன் கொண்டாடினார். அவருக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது.பிறந்தநாளையொட்டி சென்னையிலிருந்து நேற்று மாலை 5:00 மணிக்கு வந்த பன்னீர் செல்வம் தனது தாயார் பழனியம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார். வடசென்னை எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆறு அடி வெள்ளி வேல் வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, மணிகண்டன்,எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., சேகர், தேனி, ராம நாதபுரம் மாவட்ட செயலாளர்கள் சையதுகான், முனுசாமி, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா,துணை செயலாளர் அப்துல் சமது, நிர்வாகிகள் ராஜகோபால், அன்பு, சிவக்குமார், முத்துவேல் பாண்டியராஜன்,எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் முருகன்,பா.ஜ.,மாநில துணைத் தலைவர் ராஜபாண்டியன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.* போடி அருகே முந்தலில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு முந்தல் மலைக்கிராமத்தில் வசிக்கும் 71 ஏழைப்பெண்களுக்கு ஜெ., பேரவை மாவட்ட பொருளாளர் குறிஞ்சி மணி இலவசமாக சேலைகள் வழங்கினார். போடி பரமசிவன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க., கிளைச் செயலாளர் சண்முகையா, துணை செயலாளர் கருப்பசாமி, அதிமுக ஆதரவாளர் ராமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE