பொது செய்தி

தமிழ்நாடு

மேகமலை அணைகளில் குறையும் நீர்மட்டம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கம்பம், -மேகமலையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது.தொடர்ந்து பெய்த மழையால் மேகமலை உள்ள ஹைவேவிஸ், மணலாறு,வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. மழை பொழிவு ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. ஏற்கனவே இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்லும் குழாய் உடைந்ததால் சுருளியாறு

கம்பம், -மேகமலையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது.தொடர்ந்து பெய்த மழையால் மேகமலை உள்ள ஹைவேவிஸ், மணலாறு,வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. மழை பொழிவு ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. ஏற்கனவே இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்லும் குழாய் உடைந்ததால் சுருளியாறு நீர் மின்நிலையத்தில் மின்சாரம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாதிப்பு ஏற்படாது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே மேகமலையில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சில நாட்களாக உறைபனி நிலவவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X