பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
தேனி-பொங்கலையொட்டி நேற்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவலால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர். பொங்கலையொட்டி தேனி- மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு பெத்தாட்சி

தேனி-பொங்கலையொட்டி நேற்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவலால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர். பொங்கலையொட்டி தேனி- மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரகாளியம்மன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேசகந்தபெருமாள் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மூணாறில் பொங்கல் கொண்டாட்டம்மூணாறு: மூணாறைச் சுற்றி உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பல தலைமுறைகளாக தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் கொண்டாடும் பண்டிகைகளை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகின்றனர். 2021ல் கொரோனாவால் பொங்கல் உள்பட பண்டிகைகள் முடங்கின. இந்தாண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். மூன்று நாட்களக காப்பு கட்டு பொருட்கள், கரும்பு உள்பட பொங்கல் பொருட்களின் விற்பனை களை கட்டியது.நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால் காலை வீடுகளின் முன் வண்ணக் கோலமிட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.மூணாறு ஊராட்சியில் இடது சாரி கூட்டணி உறுப்பினர்கள் தலைவர் பிரவீனா தலைமையில் ஊராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கலிட்டனர். உறுப்பினர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X