'மருமகள் நகைகளை மாமியார் வைத்திருப்பது குற்றமாகாது': உச்ச நீதிமன்றம்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி-'பாதுகாப்பு காரணங்களுக்காக மருமகளின் நகைகளை மாமியார், மாமனார் வைத்திருப்பதை குற்றமாக கருத முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:என்னை என் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் மிகவும் கொடுமைப் படுத்துகின்றனர். பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி, என் நகைகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'பாதுகாப்பு காரணங்களுக்காக மருமகளின் நகைகளை மாமியார், மாமனார் வைத்திருப்பதை குற்றமாக கருத முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:என்னை என் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் மிகவும் கொடுமைப் படுத்துகின்றனர். பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி, என் நகைகளை மாமனாரும், மாமியாரும் பறித்து விட்டனர். தன் பெற்றோரை என் கணவர் ஒரு நாளும் கண்டித்தது இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து பெண்ணின் கணவன், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பெண்ணின் கணவர், அமெரிக்காவில் பணியாற்றுவதால் தன்னை அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்படி போலீசாரிடம் கோரினார். இதற்கு போலீசார் மறுத்தனர்.இதையடுத்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கோரி, பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil news


உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி ஆகியோர் அளித்த தீர்ப்பு:பாதுகாப்பு காரணங்களுக்காக மருமகளின் நகைகளை மாமியார், மாமனார் வைத்திருப்பதை குற்றமாக கருத முடியாது. மேலும் நகைகளின் விபரங்களையும், புகார் கொடுத்த பெண் தெரிவிக்கவில்லை. பெற்றோர், சகோதரர் செய்த தவறுகளுக்காக ஒருவரை குற்றவாளியாக்க முடியாது. அதனால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தவறு.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
15-ஜன-202214:19:16 IST Report Abuse
Krishnan பாலியல் கேஸ்க்கு ஒரு உருப்படியான தீர்ப்பு கிடையாது, இது ஒரு வெட்டி வேலைய தீர்ப்பு, சட்டத்தில பெரிய O இருக்கு.
Rate this:
Cancel
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
15-ஜன-202212:08:52 IST Report Abuse
R.SANKARA RAMAN இந்த நகை விஷயத்திற்கும் அந்தப் பெண்மணி அமரிக்கா போவதற்கும் என்ன சம்பந்தம். அதற்கு காவல் துறை அனுமதி எதற்கு?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
15-ஜன-202211:39:41 IST Report Abuse
Tamilan ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X