பொது செய்தி

தமிழ்நாடு

கோவையின் வளர்ச்சியில் தினமலரின் பங்களிப்பு பெரிது; வாசகர்கள் கருத்து

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (8)
Share
Advertisement
தினமலர்' நாளிதழ் வெறும் ஊடகமில்லை; ஓர் இயக்கம் என்பது எங்களின் பெருமையல்ல; ஊர் சொல்லும் பேர்; கொங்கு மண்டல வி.ஐ.பி.,க்களும், வாசகர்களும் ஒருமித்து சந்தோஷத்துடன் வழங்கும் சான்று...30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை 'தினமலர்' கடந்து வந்த பாதை குறித்து, தங்கள் பார்வையை, உணர்வுகளைச் சொல்கிறார்கள் இவர்கள்...வாசிப்பை கற்றுத்தந்தது 'தினமலர்' ராஜ்குமார்,
கோவை, வளர்ச்சி, தினமலர், பங்களிப்பு, பெரிது

தினமலர்' நாளிதழ் வெறும் ஊடகமில்லை; ஓர் இயக்கம் என்பது எங்களின் பெருமையல்ல; ஊர் சொல்லும் பேர்; கொங்கு மண்டல வி.ஐ.பி.,க்களும், வாசகர்களும் ஒருமித்து சந்தோஷத்துடன் வழங்கும் சான்று...30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை 'தினமலர்' கடந்து வந்த பாதை குறித்து, தங்கள் பார்வையை, உணர்வுகளைச் சொல்கிறார்கள் இவர்கள்...


வாசிப்பை கற்றுத்தந்தது 'தினமலர்'ராஜ்குமார், உரிமையாளர், ராயல்ஓக் பர்னிச்சர், கோவை மற்றும் திருப்பூர்:கடந்த 30 ஆண்டுகளாக நான் 'தினமலர்' வாசகன். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், மாதம் ஒரு புத்தகத்தை படித்து விடுவேன். இந்த வாசிப்பை எனக்குக் கற்றுத் தந்தது சிறுவர் மலர். ஒரு வழி தொடர்பாக இல்லாமல், ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர், சிறப்பு பகுதிகள் மூலம் வாசகர்களிடையே உரையாடும் நாளிதழாக தினமலர் உள்ளது. ஒட்டு மொத்த குடும்பத்துக்குமான ஒரே ஊடகம் 'தினமலர்'


கோவையின் வளர்ச்சியில் ''தினமலர்' பங்களிப்பு பெரிது!

சதீஷ், கன்வீனர், கோயம்புத்துார் டெவலப்மென்ட் கவுன்சில்: இன்றைக்கு கோவை மாநகரம் இத்தனை கட்டமைப்புகளையும், வசதிகளையும் பெற்றிருக்கிறது என்றால், அதில் 'தினமலர்' பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக, கோவை நகரில் உள்ள பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான ரிசர்வ் சைட்களை மீட்டுக் கொடுத்து, பல ஆயிரம் மரங்களை வளர்க்க இடமளித்து, நகரம் பசுமை ஆவதற்கு பேருதவி செய்து வருகிறது. 'தினமலர்' செய்யும் பசுமை, சூழல் பணிகள் அபாரம்!


பழங்குடியினர் செய்திக்கு முக்கியத்துவம்!

சமுத்திரபாண்டியன், தலைமை ஆசிரியர், பந்தலுார்: நான் மட்டுமல்ல; என்னை விட காலையில் 'தினமலர்' படிப்பதில் என் தாயார் முந்திக் கொள்வார். அந்த அளவிற்கு 'தினமலர்' எல்லாத்தரப்பையும் கவர்கிறது. மாணவர்களுக்கான சிறப்பு பக்கங்கள், பொது அறிவை வளர்ப்பதற்கான போட்டிகள் சிறப்பானவை. அரசு பள்ளி பழங்குடியின மாணவர்கள் சாதனைகளை ஊக்கப்படுத்துவதில் தினமலருக்கு நிகர் தினமலர் தான்.


இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் 'தினமலர்'

முத்துராஜ், கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர்: உள்ளூர் விளையாட்டுச் செய்திகளுக்கு ஒரு பக்கம் ஒதுக்கும் ஒரே நாளிதழ் 'தினமலர்'தான். அதனால்தான், கோவையிலிருந்து இன்றைக்கு பல வீரர்கள், தேசிய, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். அவர்களை ஊக்குவித்து, அங்கீகரித்து, 'தினமலர்' வெளியிடும், செய்திகளும் படங்களும் இளைய தலைமுறையிடம் விளையாட்டு ஆர்வத்தை மேலும் துாண்டுகின்றன என்பது நிஜம்.

'


தினமலர்' ஒரு தகவல் களஞ்சியம்!

மாலதி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்: மற்ற நாளிதழ்கள் போல வெறும் செய்திகளைத் தராமல், 'தினமலர்' ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராவோர், தினமலர் வாசித்தால், பொது அறிவை வளர்த்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, சிறுவர்மலர் இணைப்பே போதும். கோவை இணைப்பின் பேனர் செய்திகள் வைத்தே நகர் நடப்பை தெரிந்து கொள்ளலாம்.


latest tamil newsபொது அறிவுக்கு வழிகாட்டும் 'தினமலர்'

ஆர்.ராதாகிருஷ்ணன், போடிபட்டி, உடுமலை:. நான் 'தினமலர்' வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தினமும், காலையில் 'தினமலர்' படித்த பின்புதான் மறுவேலை. மக்கள் சேவை, ஆன்மிக மலர், சிறுவர் மலர், கல்வி மலர், வாரமலர் என 'தினமலர்' இணைப்புகள் அனைத்துமே, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக ள்ளன. பொது அறிவுக்கும், வாழ்வியல் சிந்தனைக்கும் வழிகாட்டும் மலராக 'தினமலர்' உள்ளது.


இயற்கையை காக்கும் பேராயுதம்!

என்.பாலமுருகன், தமிழாசிரியர், பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி:உண்மையின் உரைகல் என்பதற்கு ஏற்ப 'தினமலர்' நாளிதழ், பாரபட்சமின்றி உண்மையை உரைக்கிறது. குழந்தைகளின் வாசித்தலில் 'தினமலர்' முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுவர் மலர், 'பட்டம்' ஆகியவை மாணவர்களுக்கு பலவற்றை கற்றுக்கொடுக்கின்றன. எல்லாவற்றையும் விட, சூழல் பாதுகாப்புக்காகவும், இயற்கையை காக்கவும் 'தினமலர்' கொடுக்கும் குரல் வலிமையானது.


சமூகத்தை பண்படுத்தும் 'தினமலர்'

குள்ளாகவுடர், ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வர், ஊட்டி: காலை எழுந்தவுடன், தினமலர் படித்த பின்புதான், பிற நாளிதழ்களை படிப்பேன். பேராசிரியராக இருந்த போதும், மன்னார்குடியில், கல்லுாரி முதல்வராக இருந்த போதும், 'தினமலர்' படிக்காமல் இருந்ததே இல்லை. மாணவ, மாணவியருக்கான கட்டுரைகள் வெகு சிறப்பு. தமிழக வளர்ச்சியில் மட்டுமல்ல; சமூகத்தைப் பண்படுத்துவதிலும் 'தினமலர்' பங்களிப்பு மிகப்பெரியது.


நேரடியாக களமிறங்கும் ஒரே ஊடகம்!டாக்டர் ஏ. பி. சாமி, மருகு மருத்துவமனை, கோவை:இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காலங்களில் பாதிப்பு குறித்து, சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி சமுதாயத்திடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பெற்றுத் தருவதோடு, நேரில் களமிறங்கியும் உதவி செய்யும் ஒரே ஊடகம் 'தினமலர்'. வெறும் செய்திகளை மட்டும் தராமல் அதைத் தாண்டி சமூக அக்கறையுடன் செய்திகளை தரும் நாளிதழ் 'தினமலர்'.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
15-ஜன-202212:06:54 IST Report Abuse
Tamilan .....
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-ஜன-202211:46:15 IST Report Abuse
பாமரன் ...🤪)
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
15-ஜன-202210:31:02 IST Report Abuse
Apposthalan samlin உண்மையில் தினமலர் அதிக செய்திகளை உள்ளடைக்கியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X