பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி தலைவருக்கு விருது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கிள்ளை : சமூக சேவையை பாராட்டி, பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேணுகோபாலுக்கு, சேவா ரத்னா விருதை, ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்ற வேணுகோபால். இவர், கூட்டுறவு துறை மற்றும் சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவி மூலம் பொதுமக்களுக்கு, பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.இவரது

கிள்ளை : சமூக சேவையை பாராட்டி, பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேணுகோபாலுக்கு, சேவா ரத்னா விருதை, ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்ற வேணுகோபால். இவர், கூட்டுறவு துறை மற்றும் சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவி மூலம் பொதுமக்களுக்கு, பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.இவரது சேவையை பாராட்டி, சென்னை மகா பைன் ஆர்ட்ஸ் சார்பில், சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.சென்னையில் நடந்த விழாவில், ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன், பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேணுகோபாலுக்கு, சேவா ரத்னா விருதை வழங்கினார். விருதுப்பெற்ற வேணுகோபாலுக்கு, கூட்டுறவு சங்க ஊழியர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X