சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டிஅடுத்த பகண்டை தென்பெண்ணையாற்றில் மூழ்கிய சிறுவன் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர். பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தாமரைச் செல்வன்,16; பிளஸ் 1 மாணவர்.இவர் நேற்று முன் தினம் பகண்டை தென்பெண்ணையாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.அப்போது ஆழமான பகுதியில் தாமரைச்செல்வன் சிக்கிக் கொண்டார்.

பண்ருட்டி : பண்ருட்டிஅடுத்த பகண்டை தென்பெண்ணையாற்றில் மூழ்கிய சிறுவன் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர்.

பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தாமரைச் செல்வன்,16; பிளஸ் 1 மாணவர்.இவர் நேற்று முன் தினம் பகண்டை தென்பெண்ணையாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.அப்போது ஆழமான பகுதியில் தாமரைச்செல்வன் சிக்கிக் கொண்டார். பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் தேடியும் உடல் கிடைக்கவில்லை.நேற்று மீண்டும் பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் ஜமுனாராணி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு அலுவலர் சிவா முன்னிலையில் பகண்டை ஆற்றின் 30 அடி ஆழத்தில் இருந்து சிறுவன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X