சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., வை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
வடலுார் : வடிகால் வாய்க்காலை சேதப்படுத்தியதை தட்டிக் கேட்ட வி.ஏ.ஓ., உள்ளிட்ட இருவரை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். தையல்குணாம்பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18ம் தேதி வருவாய்த்

வடலுார் : வடிகால் வாய்க்காலை சேதப்படுத்தியதை தட்டிக் கேட்ட வி.ஏ.ஓ., உள்ளிட்ட இருவரை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். தையல்குணாம்பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18ம் தேதி வருவாய்த் துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்தியநாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை நேற்று வெட்டி சேதப்படுத்தினர்.

இதனை தட்டிக் கேட்ட வி.ஏ.ஓ., தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர். தனவேல் அளித்த புகாரில் குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப் பதிந்து சித்தாலிக்குப்பம் சந்தானராஜ், 32; விஜயகுமார், 31; ஆடூர் குப்பம் அறிவழகன், 30; சிவராஜ்,26; திருநாவுக்கரசு, 28; ஆகியோரை செய்து, வைத்தியநாதன், ஜோதியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X