புதுச்சேரி : திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் நாள் விழா நடந்தது.
பள்ளியின் கணித விரிவுரையாளர் கலியமூர்த்தி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் கலாவதி தலைமை தாங்கி, பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.விவேகானந்தரின் கருத்துகளை பட்டிமன்றம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மாணவிகள் விளக்கினர். ஆங்கில விரிவுரையாளர் சிவப்பிரியா நன்றி கூறினார்.விரிவுரையாளர் மணிமொழி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர் ஜீவராஜூ மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.