இந்தியா

வலுதுாக்கும் போட்டியில் பதக்கம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுச்சேரி : தேசிய வலுதுாக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற புதுச்சேரி மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி நடந்தது.இப்போட்டியில், புதுச்சேரி வலுதூக்கும் சங்க செயலாளர் பிரவீன் தலைமையில், பயிற்சியாளர் பாக்கியராஜிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள்

புதுச்சேரி : தேசிய வலுதுாக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற புதுச்சேரி மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி நடந்தது.இப்போட்டியில், புதுச்சேரி வலுதூக்கும் சங்க செயலாளர் பிரவீன் தலைமையில், பயிற்சியாளர் பாக்கியராஜிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், 53 கிலோ எடை ஜூனியர் பிரிவில் மாணவர் இளம்பருதி, ஒரு வெண் கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

69 கிலோ எடை சப் ஜூனியர் பிரிவில் மாணவி கிருத்திகா 3 தங்கம், ஒருவெள்ளி பதக்கம் வென்றார்.மாணவி அனுசியா சப் ஜூனியர் 76 கிலோ எடைப் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை, சட்டசபை வளாகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X