இந்தியா

சென்டாக் முதுகலை மருத்துவ படிப்பிற்கு விருப்ப பாடத்தை பதிவு செய்ய அறிவுறுத்தல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுச்சேரி : எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மருத்துவ மாணவர்கள் வரும் 17ம் தேதிக்குள் முன்னுரிமை விருப்ப பாடத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, பிம்ஸ்,மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா என நான்கு மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி.,எம்.எஸ்.,மருத்துவ படிப்புகளில் மொத்தம் 230 சீட்டுகள் உள்ளன. இதில்,

புதுச்சேரி : எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மருத்துவ மாணவர்கள் வரும் 17ம் தேதிக்குள் முன்னுரிமை விருப்ப பாடத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, பிம்ஸ்,மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா என நான்கு மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி.,எம்.எஸ்.,மருத்துவ படிப்புகளில் மொத்தம் 230 சீட்டுகள் உள்ளன. இதில், தனியார் கல்லுாரிகளில் மட்டும் 103 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாகவும்,110 சீட்டுகள் மேலாண்மை சீட்டுகளாகவும் நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில், முதுநிலை எம்.டி.,எம்.எஸ்., விண்ணப்பித்துள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், சிறுப்பான்மையினர் என இட ஒதுக்கீடு வாரியாக வரைவு மெரிட் லிஸ்ட் https://centacpuducherry.in/htmlpages/2021/PG-NEETMEDICAL/Draft_list.html என்ற இணைய தொடர்பில் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறுகள் இருந்தால் வரும் 17 ம்தேதி மாலை 6 மணிக்குள் எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் தங்களுடைய டேஸ்போர்டு மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் எம்.டி.,பல்மனரி மெடிசன், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் எம்.எஸ்., இ.என்.டி.,எம்.டி., சைக்காட்ரி உள்ளிட்ட மூன்று படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான சீட்டுகள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.எனவே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மருத்துவ மாணவர்கள் தங்களுடைய டேஸ்போர்டு மூலம் ரீசெட், செலக்ட், சப்மிட் மூலம் தங்களுடைய முதற்கட்ட கலந்தாய்வுக்கான படிப்புகளை முன்னுரிமையை வரும் 17 ம்தேதி மாலை 6 மணிக்குள் தேர்வு செய்யலாம்.

இதுவரை பாட பிரிவுகளை முன்னுரிமை கொடுக்காமல் காலியாக வைத்துள்ள மருத்துவ மாணவர்களும் இந்த வாய்ப்பினை, பயன்படுத்தி பாட பிரிவுகளை முன்னுரிமை கொடுக்கலாம்.பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். இது தொடர்பாக மருத்துவ மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு சென்டாக் இணையதளத்தினை பார்க்கவும். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X