புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று புதிதாக 1,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரியில் குறைந்திருந்த கொரோனா தொற்று, கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.நேற்று முன்தினம் 5,167 பேருக்கு பரிசோதன செய்யப்பட்டதில், 1,471 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் தொற்று பாதித்தோர் 1,35,337 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்த 112 பேர் மருத்துவமனைகளி லும், 5,546 பேர் வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் காரைக்காலை சேர்ந்த 74 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இறப்பு எண்ணிக்கை 1,884 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவல் 28.47 சதவீதமாகவும், குணமடைவோர் 94.47 சதவீதமாகவும் உள்ளது. மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 5 ஆயிரத்து 503 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 749 பேர் இரு தவணை தடுப்பூசிகளையும், 1,845 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE