இந்தியா

மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை; பணி சுமையா என விசாரணை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து, கான்ஸ்டபிள் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி கோரிமேடு, பூத்துறை சாலை, ஹரி நமோ நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (எ) மகேஷ்குமார், 35; புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். மன அழுத்தம் காரணமாக கடந்த சில
 மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை;  பணி சுமையா என விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து, கான்ஸ்டபிள் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கோரிமேடு, பூத்துறை சாலை, ஹரி நமோ நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (எ) மகேஷ்குமார், 35; புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். மன அழுத்தம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில், புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தேர்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணியில் ஈடுப்பட்டிருந்த மகேஷ்குமார், கடந்த சில நாட்களாக மன அழுத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு வழக்கம்போல், போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மகேஷ்குமார் வந்துள்ளார். சில நிமிடங்களில் வெளியே சென்றுள்ளார்.காலை 11:30 மணிக்கு, போலீஸ் பயிற்சி பள்ளி காவலர்கள் வெளியே வந்தபோது, பயிற்சி பள்ளி 2வது மாடியில் இருந்து, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மகேஷ்குமார் இறந்து கிடந்தது தெரிய வந்தது.உடனடியாக மகேஷ்குமார் உடலை மீட்டு, கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி.,க் கள் ரவிக்குமார், சுபம் கோஷ், தீபிகா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரணை செய்தனர்.தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரத்த மாதிரிகள் சேகரித்தனர்.

போலீஸ்காரர் மகேஷ்குமார் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்து கொண்ட மகேஷ்குமாருக்கு, மனைவி சுதா, ஸ்ரீ ஹரி, 8; என்ற மகன் உள்ளனர். மகேஷ்குமாரின் தந்தை ஓய்வு பெற்ற தலைமை காவலர் ஹரிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X