புதுச்சேரி : புதுச்சேரியில் இயங்கும் ஸ்பாவில் போலீசார் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
புதுச்சேரியில் மசாஜ் சென்டர் ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக புகார் எழுந்ததால், பல ஸ்பாக்களில் போலீசார் ஆய்வு செய்து, பெண்களை மீட்டு விபசார வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள, கவின் பியூட்டி பார்லர் ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஸ்பாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்பாவில் உள்ள இரண்டு தனித்தனி அறையில் 2 பேர், பெண்களுடன் உல்லாசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விபசாரத்தில் ஈடுபட்ட திரிபுரா, சென்னை உட்பட பல பகுதிகளை சேர்ந்த 6 பெண்களை போலீசார் மீட்டனர். கஸ்டமர்களாக வந்த கடலுார், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன் (எ) மதன்ராஜ், 31; வில்லியனுார் மணவெளி, திருவேணி நகர் கார்த்திக் (எ) அன்னப்பன், 32; ஆகியோரை கைது செய்தனர்.விபசார தொழில் நடத்திய புரோக்கர் உப்பளம், நேதாஜி நகர் 2வது பகுதி, அசோகன் வீதி, 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சிலம்பரசன் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் மீட்கப்பட்ட 6 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE