சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி அருகே பெண் தற்கொலை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக துாக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த அழகுபெருமாள்குப்பம் கிராமம் , பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுமன்ராஜ், 30; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சிவரஞ்சனி,30; இருவரும் காதலித்து கடந்த 2019 ல் திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஜஸ்வந்த் என்ற மகன்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக துாக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அழகுபெருமாள்குப்பம் கிராமம் , பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுமன்ராஜ், 30; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சிவரஞ்சனி,30; இருவரும் காதலித்து கடந்த 2019 ல் திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று அதிகாலை 2:00 மணியளவில் சிவரஞ்சனி வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.

ஆபத்தான நிலையில் அவரது உறவினர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவரஞ்சனி இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவரஞ்சனியின் தந்தை கந்தசாமி,75; கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் தற்கொலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X