பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் தொழிற்சாலைகளில் பொங்கல்

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவையிலுள்ள சிறு, குறு தொழிற்கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொங்கல் விழா நடந்தது.கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்களும், 15 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாலும், மக்கள் அதிக அளவு கூடும்

கோவை: கோவையிலுள்ள சிறு, குறு தொழிற்கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொங்கல் விழா நடந்தது.

கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்களும், 15 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாலும், மக்கள் அதிக அளவு கூடும் வகையில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்காததாலும், சிறு மற்றும் குறு நிறுவன வளாகங்களிலேயே பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தேறின. தொழிற்சாலை வளாகத்தின் முன், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் ( டேக்ட்) அமைப்பு தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,''தமிழக அரசு விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதனால் நாங்கள், தொழிற்கூட வளாகங்களில் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளை சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தினோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202211:46:56 IST Report Abuse
Ram Pollachi ஓட்டல் எல்லாம் மூடி விட்டார்கள் அதனால் தொழிற்சாலையில் பொங்கல் வைத்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X