பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த பெண்களின் காளைகள்

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிங்கப்பெண் சுகந்தி, சொந்த ஊர் மதுரை சோளங்குருணி. 10 ஆண்டுகளாக என் 'முத்துக்காளை' ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்குது. ஒரு முறை கூட பிடிமாடுனு பட்டம் வாங்கினது இல்லை. எல்லா வாடியிலும் சும்மா நின்னு மிரட்டி, ஜெயிச்சுட்டு தான் வரும். பாராட்டி, சீராட்டி குழந்தை போல் வளர்ப்பதால் ரொம்ப பாசம் காட்டுவான்.வீரச்சிறுமி ஸ்வேதா, சொந்த ஊர் மதுரை சிந்தாமணி, 10வது படிக்கிறேன்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த பெண்களின் காளைகள்

சிங்கப்பெண் சுகந்தி, சொந்த ஊர் மதுரை சோளங்குருணி. 10 ஆண்டுகளாக என் 'முத்துக்காளை' ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்குது. ஒரு முறை கூட பிடிமாடுனு பட்டம் வாங்கினது இல்லை. எல்லா வாடியிலும் சும்மா நின்னு மிரட்டி, ஜெயிச்சுட்டு தான் வரும். பாராட்டி, சீராட்டி குழந்தை போல் வளர்ப்பதால் ரொம்ப பாசம் காட்டுவான்.

வீரச்சிறுமி ஸ்வேதா, சொந்த ஊர் மதுரை சிந்தாமணி, 10வது படிக்கிறேன். வீட்டில் ஒருத்தனா நினைச்சு காளை 'ராமு'வை வளர்க்கிறோம். இதுக்கு தீனி வைக்குறது, பராமரிக்கிறது எல்லாம் என் பொறுப்பு. பொதுவாக இவன் மனசு தங்கம். ஆனால், போட்டினு வந்துட்டா சிங்கமா சீறுவான். மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் பரிசு வாங்கிட்டு வந்திருக்கான்.

முதலிட வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள், பாத்திரங்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷன் கார்த்திகேயன், எஸ்.பி., பாஸ்கரன் சிறந்த காளைகள், வீரர்களுக்கு தங்க காசு பரிசளித்தனர். போட்டியில் 24 காளைகள் அடக்கி, முதலிடம் பிடித்த அவனியாபுரம் கார்த்திக், முதன் முறையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காரை வென்றார்.

19 காளைகள் அடக்கிய வலையங்குளம் முருகன் இரண்டாம் இடம் பெற்று டூ - வீலர் வென்றார். 11 காளைகள் அடக்கிய பரத், மூன்றாம் இடம் பெற்று பசுவும் கன்றும் வென்றார்.காலை 7:25 மணிக்கு துவங்கிய போட்டி மாலை 5:10 மணிக்கு முடிந்தது. ஏழு சுற்றுக்களில்568 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கினர்.விழா கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது. சிறந்த காளை உரிமையாளர் மணப்பாறை தேவசகாயத்திற்கு டூ-வீலர் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
15-ஜன-202212:06:59 IST Report Abuse
veeramani தமிழர்களின் தொன்மையான விளையாட்டு ...ஜல்லிக்கட்டு .. நேற்று வருட முதன்முதல் அவனியாபுரம் சிறப்பாக நடைபெற்றது. சிங்கபெண்களின் வளர்ப்பில் வந்த காளைகள் சீறிப்பாய்ந்தது . இதில் பெருமைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X