பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை தாமரை குளத்தில் உத்தராயண தீர்த்தவாரி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்தராயண புண்ணிய கால தீர்த்தவாரி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 5ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.இதை தொடர்ந்து, தினமும், காலை, மாலை என இரு வேளைகளிலும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து
திருவண்ணாமலை தாமரை குளத்தில் உத்தராயண தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்தராயண புண்ணிய கால தீர்த்தவாரி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 5ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.இதை தொடர்ந்து, தினமும், காலை, மாலை என இரு வேளைகளிலும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.இதில் நேற்று காலை, தாமரைக்குளம் கரையில் விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.இதை தொடர்ந்து விநாயகர், சந்திரசேகர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூறும் வகையில், திருவூடல் வைபோகத்தை தொடர்ந்து, சுவாமி அம்மன் கிரிவலம் சென்று, மீண்டும் கோவில் திரும்பும்போது மறுவூடல் வைபோகம் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X