கடமை உணர்வு இல்லாத அதிகாரிகள் பதவி வகிக்கும் உரிமையை இழந்துவிட்டனர்: மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்| Dinamalar

கடமை உணர்வு இல்லாத அதிகாரிகள் பதவி வகிக்கும் உரிமையை இழந்துவிட்டனர்: மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (21) | |
மதுரை-மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானதற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, மின்வாரிய தலைவருக்கு கண்டனத்தை வெளிப்படுத்தியது.மதுரை அருகே பூலாங்குளம் முத்து தாக்கல் செய்த மனு: எனது 13 வயது மகன் 2017 செப்.,19 ல் பக்கத்து தெருவில் உள்ள பாட்டியை சந்திக்க சென்றார். அப்போது மழை பெய்தது. ஒரு மின்கம்பத்தை தொட்டார். மின்சாரம் தாக்கியதில் மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை-மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானதற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, மின்வாரிய தலைவருக்கு கண்டனத்தை வெளிப்படுத்தியது.latest tamil news


மதுரை அருகே பூலாங்குளம் முத்து தாக்கல் செய்த மனு: எனது 13 வயது மகன் 2017 செப்.,19 ல் பக்கத்து தெருவில் உள்ள பாட்டியை சந்திக்க சென்றார். அப்போது மழை பெய்தது. ஒரு மின்கம்பத்தை தொட்டார். மின்சாரம் தாக்கியதில் மகன் இறந்தார். மின்வாரியத்தின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி மின்வாரிய தலைவருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்து குறிப்பிட்டார்.நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார்.மின்வாரியம் தரப்பு: மழையின் போது மின்கம்பங்களை தொடக்கூடாது என அடிக்கடி அறிவிப்பு செய்கிறோம். மின்வாரிய கவனக்குறைவால் சம்பவம் நடக்கவில்லை. பலத்த மழை, காற்று இருந்தது. கடவுளின் செயலால் சிறுவன் உயிரிழந்தார். இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பதில் மனு தாக்கல் செய்தது.

நீதிபதி: தமிழ்நாடு மின் வாரிய தலைவர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்செட்கோ) தலைவர், மதுரை கண்காணிப்பு பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்யவோ அல்லது பதிலளிக்கவோ கூட நினைக்கவில்லை. அவர்களுக்கு கடும் கண்டனத்தை இந்நீதிமன்றம் தெரிவிக்கிறது. இழப்பீடு தொடர்பாக கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வது தங்களின் கண்ணியத்திற்கு குறைவானதாக அவர்கள் கருதுகின்றனர். சிறுவனின் மரணம் பற்றி கவலைப்படவில்லை.ஒவ்வொரு குடிமகனையும் பொது ஊழியர் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வை கொண்டிருக்கவில்லை. குறிப்பிட்ட அலுவலகங்களில் அவர்கள் பதவியில் தொடர்வதற்கான உரிமை அல்லது அதிகாரத்தை இழந்துவிட்டனர் என கூறலாம். அவர்கள் மனுவில் எழுப்பிய வாதங்களை மறுக்கலாம்.


latest tamil news


ஆனால் கருப்பாயூரணி உதவி பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவின் பின்னால் அவர்கள் மறைந்து கொண்டுள்ளனர். ஒரு இளம் இந்திய குடிமகனின் மரணத்திற்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. தலைவர் உள்ளிட்ட 3 பேரின் அணுகுமுறை குறித்து மீண்டும் வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன். மின்வாரியம் ரூ.5 லட்சத்தை 12 வாரங்களில் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீடு தேவையெனில் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுக உரிமை அளிக்கப்படுகிறது என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X