ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்தவர் தனுஸ், 42, டிரைவர், இளையராஜா, 38. இருவரும் சென்னையில் இருந்து, திருவண்ணாமலை வழியாக தர்மபுரி நோக்கி, மதுபானங்களை ஏற்றிய லாரியில் சென்று கொண்டிருந்தனர். மிட்டப்பள்ளி அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் எதிரில், லாரி தடுமாறி கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த பீர் பாட்டில்களில் பெரும்பாலானவை உடைந்து சேதமடைந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் லாரியில் மீதமிருந்த பீர் பாட்டில்களை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பொது மக்களை அங்கிருந்து விரட்டினர். உடைந்த பீர் பாட்டில் மதிப்பு, 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிகிறது. பீர் பாட்டில்கள் உடைந்து ஆறாய் ஓடியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE