பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக காயர் பொருட்கள்: ஐ.நா., ஆலோசகர் தகவல்!

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
பொள்ளாச்சி: ''பிளாஸ்டிக்குக்கு மாற்றாக உள்ள, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தொழில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது,'' என, ஐக்கிய நாடு சபை ஆலோசகர் கவுதமன் தெரிவித்தார்.இந்தியாவில், 21,450 தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில், 1,250

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பொள்ளாச்சி: ''பிளாஸ்டிக்குக்கு மாற்றாக உள்ள, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தொழில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது,'' என, ஐக்கிய நாடு சபை ஆலோசகர் கவுதமன் தெரிவித்தார்.latest tamil newsஇந்தியாவில், 21,450 தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில், 1,250 ஏற்றுமதியாளர்கள் கயிறு வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
கயிறு வாரியத்தின் கீழ், 21 ேஷாரூம், இரண்டு ஆய்வு மையங்கள், ஆறு பயிற்சி கூடங்கள் உள்ளன. தென்னை நார் தொழில் மேம்பட மத்திய அரசின் கயிறு வாரியம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் கொடுக்கிறது.
அதில், மண் அரிமானம் கட்டுப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குக்கு மாற்றாக உள்ள, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. ரோடு போடும் பணிக்கு இவை பயன்படுத்துவதால் இதனை தயாரிக்க உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஐக்கிய நாடு சபை ஆலோசகர் கவுதமன் கூறியதாவது:


latest tamil newsதார்சாலை, நிலச்சரிவு தடுக்க பிளாஸ்டிக் வலை (ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்) பயன்படுத்தப்பட்டது. தற்போது, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தென்னை நார் முதலில், '2 - பிளை' கயிறாக மாற்றப்படுகிறது. தானியங்கி இயந்திரம் வாயிலாக, ஒரு மீட்டர் முதல், நான்கு மீட்டர் அகலம்; 50 மீட்டர் முதல், 100 மீட்டர் நீளம் வரை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு, 250 சதுரமீட்டர் முதல், 450 சதுர மீட்டர் வரை உற்பத்தி செய்யலாம். 400 ஜி.எஸ்.எம்., (400 கிராம் ஒரு சதுர மீட்டருக்கு), 1,200 ஜி.எஸ்.எம்., வரைக்கும் பல்வேறு வகைகள் உள்ளன.ஒரு சதுர மீட்டர், 40 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை நாரினால், இயற்கைக்கு எந்த தீங்கும் இல்லை. இதில், 45.84 சதவீதம் லெக்கினின் இருப்பதால், மக்குவதற்கு தாமதமாகும். வலிமை இருப்பதுடன், நெகிழ்ந்து போகும் தன்மை கொண்டதாகும். மண்ணோடு மண்ணாக மக்க, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரையாகும்.latest tamil newsஅமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பிளாஸ்டிக் உபயோகத்துக்கு மாற்றாக, மலைப்பகுதிகளில், நிலச்சரிவு; குளம், குட்டைகள் மண் அரிமானம் தடுக்க, 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' பயன்படுத்த துவங்கியுள்ளனர்.மேலும், சுரங்கங்களில் கனிமங்கள் எடுத்த பின், மறுசீரமைப்பு செய்ய மற்றும் அந்த பகுதியில் மரங்கள், செடிகள் வளர்க்க, 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' பயன்படுத்துகின்றனர்.
வெர்டிக்கல் கார்டனுக்கு உகந்ததாகும். கார், டெக்ஸ்டைல்ஸ், லெதர் போன்ற பெரிய தொழிற்சாலைகளில், வெப்ப சலனத்தை குறைக்க மேற்கூரை மீது இதனை போட்டு, தண்ணீர் தெளித்தால், வெப்ப நிலை சீராக இருக்கும்.தற்போது, ஊரக ரோடுகள் மேம்படுத்தும் போது, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு, இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழகத்தில், 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
15-ஜன-202213:05:05 IST Report Abuse
N Annamalai நல்ல மாற்று .அரசு வேலைகள் இதை உபயோகப்படுத்த கட்டாய படுத்த வேண்டும் .அதன் பின் மக்கள் அன்றாட உபயோகத்திற்கு பயன் படுத்த ஆரம்பிப்பார்.எவ்வளவோ பொருட்கள் இன்னும் டிங்சரி உபயோகத்திற்கு வர வில்லை .
Rate this:
Cancel
15-ஜன-202211:42:06 IST Report Abuse
Ram Pollachi பித்து கட்டியை ஏற்றுமதி செய்து இங்கு உள்ள விவசாய நிலங்கள் சத்து இழந்து, நிலத்தடி நீர் உப்பாக மாறியது தான் மிச்சம். தாமதமாக விழித்துக் கொண்ட நிர்வாகம் இப்பொழுது கெடுபிடி காட்டுவதால் தொழில் படுத்துவிட்டது.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-ஜன-202209:31:20 IST Report Abuse
S.Baliah Seer நல்ல யோசனை தான்.ஆனால் பூனைக்கு யார் மணிக்கட்டுவது ?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஜன-202215:08:45 IST Report Abuse
 Muruga Velபூனைக்கு எதுக்கு மணி கட்டணும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X