வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், பிரிட்டனுக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்தியா, பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் அன்னேமேரி டிரெவிலியன், கடந்த 12ம் தேதி டில்லி வந்தார்.
நேற்று முன்தினம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து அதிகவிலைக்கு பஞ்சு, நுால் இறக்குமதி செய்து ஆடை தயாரிக்கிறது வங்கதேசம். ஆனாலும், பல்வேறு நாடுகள் வழங்கியுள்ள வரிச்சலுகைகளை பயன்படுத்தி, ஆடைகளை குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தி, நம் நாட்டின் ஜவுளித்துறைக்கு சவால் விடுகிறது.

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு நகர்வுகள், மகிழ்ச்சி அளிக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்திய ஆடைகள், வரியின்றி பிரிட்டன் சந்தையில் இறக்குமதியாகும்.
வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளை விடவும் குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்தி, பிரிட்டன் சந்தையை, இந்திய ஜவுளித்துறை வசப்படுத்தி கொள்ளும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE