வணிக வளாகங்களில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது; கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொச்சி: வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்கள் அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்காக வணிக வளாகம் சார்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக வசூலித்து வருகின்றன. அதிலும், குறிப்பிட்ட
Malls, Dont Have Rights, Collect Parking Fees, Kerala HC, High Court, மால், வணிக வளாகம், வாகன நிறுத்தம், கட்டணம், வசூலிக்க தடை, கேரளா, உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொச்சி: வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்கள் அந்த கட்டடத்தின் அடிப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்காக வணிக வளாகம் சார்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக வசூலித்து வருகின்றன. அதிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால், கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
15-ஜன-202215:14:33 IST Report Abuse
PKN தனியார்கள் இஷ்டத்திற்கு கொள்ளையடிப்பதை தடுக்கும் நீதிமன்றத்திற்குமா நீதி அரசுர்களுக்கும் நன்றி . அப்படியே சாலைக்காக பெட்ரொல் டீசல் மற்றும் வாகன வரியில் வரியை வசூலிக்கும் அரசு சாலைக்காக தனியாக உபயோகிப்பாளர் கட்டணம்வசூழிப்பதை நீதிமன்றமும் நீதி அரசுக்கும் தடை செய்வார்களா?
Rate this:
Cancel
15-ஜன-202212:19:03 IST Report Abuse
ஆரூர் ரங் பெரும்பாலான மக்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே மால்களுக்கு விஜயம் செய்கிறார்கள்🙄 . அவர்களால் மால் உரிமையாளர்களுக்கு எவ்வித வருமானமும் கிடைக்காது. ஆளும் குடும்பமே பெரும்பாலான பெரியபடங்களைப் பிடுங்கி வெளியிடுவதால் தியேட்டர் சினிபிளெக்ஸ்சிலும் நஷ்டம்தான்🤧🤧. ஒன்றுமே வாங்காத வாடிக்கையாளர்களிடம் வாகன நிறுத்தக்கட்டணம் கூட வசூலிக்கக் கூடாது என்றால் அந்த வணிகத்தை நடத்தவே முடியாது.( நீதிபதி எவ்விதத்திலாவது பாதிக்கப்பட்டாரா எனத் தெரியவில்லை.) மாநகரங்களில் நிலத்தின் விலையைக் கணக்கில் எடுத்தால் பார்க்கிங் வருமானம் வங்கி வட்டிக்குக் கூட போதாது. பொழுதுபோக்கு வி‌ன்டோ ஷாப்பிங்கை கட்டுப்படுத்தவாவது கட்டணம் வசூலித்துத்தான் ஆகவேண்டும்.
Rate this:
Prem - ,
15-ஜன-202214:57:25 IST Report Abuse
Premநீங்க ஒரு படம் பார்க்க போங்க.. குறைந்தது , 150 அழ வேண்டி இருக்கும்..கடை வாடகை வரும் இடத்தில் எதற்கு மீண்டும் கூடுதல் வருமானம்...
Rate this:
Cancel
Prem -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-202211:35:18 IST Report Abuse
Prem இது தமிழ் நாட்டிற்கு எப்போது பொருந்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X