பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சைப் பெரிய கோவிலில் எளிமையாக நடந்த மகரசங்கராந்தி

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் செய்து, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.
தஞ்சைப் பெரிய கோவிலில் எளிமையாக நடந்த மகரசங்கராந்தி

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் செய்து, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையான முறையில், ஒரு பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, புத்தாடை அணிவித்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பசுவிற்கும் - கன்றுக்கும் சர்க்கரை பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு சுமார் 200 கிலோ எடையுடைய காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் யாரும் இன்றி கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharma - Madurai,இந்தியா
16-ஜன-202210:39:19 IST Report Abuse
Dharma .// பூஜைகள் நடைபெற்றன. // மகாசங்கராந்தி // மகரசங்கராந்தி.
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
15-ஜன-202212:18:14 IST Report Abuse
Sriniv ஓம் நம சிவாய. என்ன தான் கல் நந்தி என்றாலும், 1000 கிலோ எடையினால் பாதிப்பு ஏற்படாதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X