பொது செய்தி

தமிழ்நாடு

அரியவகை பவளப்பாறைகளின் சொர்க்க பூமி பிச்சைமூப்பன் சுற்றுலா மையம்!

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராமநாதபுரம்: ஆரவாரமில்லாத அலைகள், அழகிய சவுக்கு மரங்களின் இயற்கை எழில்மிகு கடற்கரை இதற்கெல்லாம் மேலாக கடலுக்கு நடுவே மணல்திட்டு, தீவுகளின் இயற்கை அழகு, கடலுக்குள் காணப்படும் அரியவகை பவளப்பாறைகள், கடல்பாசிகள், வண்ண மீன்களின் அணிவகுப்பு அடங்கிய சொர்க்க பூமியாக ஏர்வாடி பிச்சைமூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையம் திகழ்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமநாதபுரம்: ஆரவாரமில்லாத அலைகள், அழகிய சவுக்கு மரங்களின் இயற்கை எழில்மிகு கடற்கரை இதற்கெல்லாம் மேலாக கடலுக்கு நடுவே மணல்திட்டு, தீவுகளின் இயற்கை அழகு, கடலுக்குள் காணப்படும் அரியவகை பவளப்பாறைகள், கடல்பாசிகள், வண்ண மீன்களின் அணிவகுப்பு அடங்கிய சொர்க்க பூமியாக ஏர்வாடி பிச்சைமூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையம் திகழ்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் மன்னார் வளைகுடா பகுதியில், கடலில் ஒரு கி.மீ., தொலைவில் மணல் திட்டுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் கடல் தாவரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.latest tamil newsஇதையடுத்து ராமநாதபுரம் மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவனத்துறையினர் மணல் திட்டு சமூகம் சார்ந்த சுற்றுலா மையம் படகு சவாரியுடன் அமைத்துள்ளனர்.அரியவகை வளப்பாறைகள், தாவரங்கள், மீன்கள்: இங்கு 7அடி முதல் 9அடி ஆழத்தில் மனித மூளைவடிவபவளப்பாறைகள், மேஜை வடிவம், விரல் வடிவம், மலை வடிவ பவளப்பாறை, மான்கொம்பு வடிவம், தாமரை இலைவடிவம் ஆகிய அரியவகை பவளப்பாறைகள் நிறைய உள்ளன.

கடற்புற்கள் வளர்ந்து, வண்ண மீன்கள், கடல் அட்டைகள், பச்சை, நீளம், சிவப்புநிற கடல்பாசிகள் மற்றும் டால்பின்களும், சங்குகள், சிப்பிகள், முத்துக்கள் காணப்படுகிறது. இதுபோக மணல் திட்டு பகுதியிலிருந்து யானைபார் தீவு, வாலிமுனைதீவுகளின் எழில்மிகு இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.பாதுகாக்கப்படும் கடல்வளம் பவளப்பாறைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்த இடமாக உள்ளது.


latest tamil newsசுனாமியின் போது அலைகளின் வேகத்தை தடுக்கும் சுவராகவும், கடல் வெப்ப நிலையைச் சமப்படுத்தும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவும், கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் காரணியாகவும் பவளப்பாறைகள் உள்ளன. கடலுக்கு அடியில் உள்ள அனைத்து வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கண்டுமகிழலாம்.

ஏர்வாடி வனரேஞ்சர் லோகநாதன், பாரஸ்டர் கனகராஜ், திட்டகளப்பணியாளர் முருகேசன் குழுவினர் சுற்றுலா பயணிகளுக்கு பவளப்பாறைகள், கடல் தாவரங்கள் குறித்து விரிவாக விளக்குகின்றனர்.குறைந்த கட்டணம்இதுபோன்ற கடல்பகுதி சுற்றுலாவிற்கு அந்தமான் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது.


latest tamil newsஇங்கு தலா ரூ. 200 வசூல் செய்யப்படுகிறது. 12 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் கண்ணாடியிலான மூன்று அலுமினிய படகுகள் பயன்பாட்டில் உள்ளன. பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) வழங்கப்படுகிறது. காலை 9:00மணி முதல்மாலை 4:00மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். விபரங்களுக்கு 86109 93232 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202214:44:54 IST Report Abuse
Kasimani Baskaran அருமை...
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
15-ஜன-202212:48:51 IST Report Abuse
N Annamalai we will come and see
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
15-ஜன-202212:04:51 IST Report Abuse
vasan அருமை...இதை பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்//,,,அந்த பகுதி மக்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகவும் அமையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X