சேலம்: சாலை மறியலில் ஈடுபட்ட வி.சி. கட்சி பயிற்சி பிரிவு மாநில செயலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் பிரபாகரன் 45. இவரை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 12ல் உயிரிழந்தார்.
இதற்கு போலீசார் தொந்தரவே காரணம் எனக்கூறி வி.சி. கட்சி பயிற்சி பிரிவு மாநில செயலர் இமயவரம்பன் தலைமையில் உறவினர்கள் நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டவுன் வி.ஏ.ஓ. கோபிநாத் டவுன் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் அனுமதியின்றி கூடி சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறியிருந்தார். இதனால் இமயவரம்பன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement