சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி ஏற்படுத்திய விபத்தில் பழ வியாபாரி பலி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சென்னை: குடிபோதையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், சாலையோரத்தில் சென்ற, பழ வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி, 20; ரவுடி. இவர் நேற்று காலை, குடிபோதையில், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த, பிரேம்குமார் 20 என்பவருடன், இருசக்கர வாகனத்தில், கொன்னுார் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, நம்மாழ்வார்பேட்டை

சென்னை: குடிபோதையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், சாலையோரத்தில் சென்ற, பழ வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி, 20; ரவுடி. இவர் நேற்று காலை, குடிபோதையில், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த, பிரேம்குமார் 20 என்பவருடன், இருசக்கர வாகனத்தில், கொன்னுார் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, நம்மாழ்வார்பேட்டை அருகில், சாலையில் தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. பின், எதிர்புறமாக வந்த முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தினர்.விசாரணையில், விபத்தில் இறந்தவர் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சண்முகம், 61; பழ வியாபாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ரவுடி கிருபாநிதியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருபாநிதி மீது, அண்ணா நகர் உட்பட சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X